அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோமொபைல், உதிரிபாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு துறைசார் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் “இது அமெரிக்கா–ஜப்பான் வர்த்தக உறவின் புதிய அத்தியாயம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் 550 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

