அமெரிக்காவுடனான ஒப்பந்தந்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் கோத்தபாயாவுக்கு எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி கையெழுத்திட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இந்த கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது