அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று நேற்று (12.02.2024) கொலன்னாவை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனூடாக, அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் தொகையை இலங்கையினுள் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த (08.07.2023) ஆம் திகதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இது தொடர்பான முன் உடன்படிக்கையில் கைசாத்திட்டிருந்த நிலையில், உரிய எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.