அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை (19) திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்க உள்ளது.
இந்தக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்புத் துறைமுகத்தில் இறங்கி சொகுசுப் பேருந்துகளில் சுமார் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல், ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று எதிர்வரும் 21ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கப்பலில் திரும்பிச் செல்லவுள்ளதாக “டேவ் மரைன்” கப்பல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது