அன்பான ஜேர்மன் செயல்பாட்டாளர்களே உங்கள்
அன்பான யேர்மன் செயற்பாட்டாளர்களே உங்கள் விழிகளைத் திறவுங்கள் இல்லையேல் தமிழர் ஒருங்கிணைப்பை செயற்படுத்த நல்ல தலைமையிடம் கொடுங்கள் !
காரணம் ஓர் வீட்டைக் கட்டியவனுக்குத்தான் அதன் வலிகள், கஸ்ரங்கள், கடந்த பாதைகள்.
அந்த வகையில் யேர்மனியில் தேசிய இயக்கத்தை கட்டி எழுப்ப எம் போன்றோர் பணியும் இருந்ததால்தான் இன்று உங்களில் பலர் இந்த பதவியில் உள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வீடுகள், எம்மவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த அகதி முகாம்கள் எல்லாம் சென்று 5 மார்க், 10 மார்க் வாங்கி பலவழிகளில் விடுதலைக்குப் பலம் சேர்த்ததோடு, நாங்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய தழிழர் ஒருங்கிணைப்புக் குழுவை, இன்று உங்களது ஒருங்கிணைப்புக் குழுவாக்கி நிற்பவர்களே!
மக்களால் தான் நீங்கள் உங்களால் மக்கள் அல்ல நீங்களும் இந்த மக்களுக்கிடையில் ஒருவரே.
மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நீங்கள் அல்லாது உங்கள் திணிப்புகளுக்காக மக்கள் அல்ல!
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் மெளனிக்கும்வரை, தேசியம் என்ற ஒருங்கிணைப்புக்குள் அனைவரும் கட்டுப்பட்டு இருந்த காலம்வரை தேசியத்தலைவர் சொன்னது யாவும் நடந்தது. அது போல் எமது இனத்தை வழிநடத்த நல்ல சிந்தனையும், பன்முக ஆற்றல் உள்ளவர்களும் வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எமது வரலாற்றை, பண்பாட்டை புண்படுத்தி பின்னர் அதை நியாப்படுத்த முயல்வது ஒரு நற்செயல் அல்ல.
நல்ல கருத்துச் சொல்வோரை எதிரி என்பதும்! துரோகி என்பதும் !
உங்களுக்கு வேடிக்கையாகிவிட்டது என்பதும் எமது மக்கள் நன்கு அறிந்ததே.
நீங்கள் உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு திணிக்காமல் தமிழ் இனத்தின் தேசிய சிந்தனையை சிதைத்து விடாமல் அனைத்தையும் ஒருங்கிணைக்க நல்ல தருணம் என்பதை உணருங்கள்.
வரலாற்று திரிபை மாற்றி மக்கள் கேட்பது போல் வரலாற்றை சரி செய்யுங்கள் நீங்களாகவே நகரம் நகரமாக கூட்டமாகச் சென்று ஒன்றாக ஒற்றுமையாக வாழ்கின்ற மக்களை பிரிக்காதீர்கள்.
பல இடங்களில் ஏற்கனவே பிரித்துள்ளீர்கள் அந்த தவறுகளை இன்னமும் திருத்தவில்லை இந்தக்கருத்தும் ஏற்கவில்லை என்றால் நீங்கள் என்ன தன்னதிகாரம் கொண்டவர்களா?
சிந்தியுங்கள் ஒரு கட்டிடத்தை கட்டுவது சிரமம் அதை உடைப்பது என்றால் வெகு விரைவாக உடைக்கலாம் இதில் நீங்கள் உடைப்பாளர்களா? காப்பாளர்களா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்,
உங்கள் செயற்பாடுகள் இதுபோல் தொடருமாக இருந்தால் உங்களை மக்கள் ஒதுக்கி ஓரம் கட்டி விடுவார்கள் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இங்கே இன்னும் ஓர் குறிப்பு இப்போது இருப்பவர்களுக்கு தெரியாத ஒருதவகல் ஆர்ம்பம் இங்கே தமிழாயம் உருவாகவில்லை தமிழ் ஆர்வலர்கள் பலர் கூடி தமிழ் கற்பிக்கப்பட்ட கூட்டில் இருந்த ஜயா நாலிங்கத்தை பொன் நகரத்தில் வாழ்ந்த விக்கி
அதில் இருந்து பிரித்தது,
ஜயா நாலிங்கத்தின் வரலாற்றில் அதைமறைத்ததை என்று ஆரம்பமானது வரலாற்றுத்திரிப்பு. உள்ளதை உள்ளபடி பதிவிடாத தவறு உங்களது. உங்களுக்கு தெரியாவிட்டால் உங்களுக்கு முன் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பதிவிட்டிருக்கலாம் இது போன்று பலவிடயங்கள் பல இடங்களில் உங்களால் மறைக்கப்படுவதோடு
பல இடங்களில் சிறார்களின் எதிர்காலத்தை எண்ணி, எம்போன்ற பலர் உருவாக்கி தனித்துவமாக இயக்கிய பள்ளிகளை நம் போன்றோர் இணைத்ததால்தான் தமிழாலயங்கள் உருவானது என்பது இன்று இருக்கும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நீங்கள் இல்லாமல் எதுவும் அசையும் ஆனால் மக்கள் ஆதரவு இல்லாமல் உங்கள்செயற்பாடுகள், நகர்வுகள் எதுவும் சாத்தியம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே ஒன்றை உணருங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு என்பது ஒன்றும் உங்கள் எங்கள் சொத்தல்ல இது மொத்த தமிழரின் உரித்து உரிமை என்பதை உணருங்கள்.
உங்கள் தவறான செயற்பாடுகளால் எம்போன்றோரின் மனக்குமுறலை ஆதங்கத்தை பதிவிடச் செய்கிறீர்கள்.
பிரான்ஸ் பாரீசில் உள்ள ஒருவர் உங்கள் செயலால் நீர்கூட அருந்தாத உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளார். அவர் உயிர் பிரியக்கூட நீங்கள் காரணம் ஆவீர்கள்.
திலீபன் எதிரியிடம் காந்தியத்திடம் எமக்கான தாயத்துக்காக விதையாகினார்.
அன்னை பூபதி எமது மண்ணுக்காய் தன் உயிர் தந்தார்.
இங்கே பொறுப்பற்றவர்களது செயற்பாட்டால் ஒருவர் உயிர் போவதா? இதைப் பார்த்துக்கொண்டு மக்கள் இருப்பார்களா?
இதற்கெல்லாம் நீங்கள் பதில் கூறவேண்டும். என்னதான் செய்யப்பபோகிறீர்கள்!
நல்லதை செய்யுங்கள் மக்களோடு இணையுங்கள் அதுவே சிறந்தது இதில் யாரும் வெல்லவும் இல்லை யாரும் தோற்கவும் இல்லை நாம் அனைவரும் ஈழத்தாய் பிள்ளைகள் என்பதே உண்மை இணைந்த கரத்துடன் பயணிப்பதே எமது விடிவு எமது மாவீரர் கனவு தலைவன் வகுத்த செயற்பாடு, எங்கள் மக்களின் நல்வாழ்வு என்ற சிந்தனையுடன் இணைப்போடு வாழ எதிர்காலம் நமதாக்க இணைந்து நிற்போம் என்றும் நாம் !
சுப்பிரமணியம் தேவராசா
eelattamilan.stsstudio.com பிரதி எடுக்கப்பட்டது
நன்றி.