கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நாளை முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நிதியூடாக சலுகைகளை பெறும் VIP தரப்பினர், பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பை புறக்கணித்து சிறப்பு சலுகைகளை அனுபவிக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்காக ஆட்சியாளர்கள் தேசிய வேலைத்திட்டமொன்றை வகுத்து, தீர்வுகளை வழங்கும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.