அனைத்துத் தொழிற்துறைகளிலும் நம்பிக்கைக்குரிய தொழில் முயற்சிகளைக் கண்டறியும் நோக்கில் இலங்கையில் எக்வா எல்எல்சி நிறுவனம் களமிறங்கவுள்ளது.
நிலைத்திருக்கக்கூடிய தொழில்களை உருவாக்கவும் நிதிகளைத் திரட்டவும் நம்பிக்கை அளிக்கும் தொழிலில் முதலீடு செய்யவதையும் அதற்கு வழிகாட்டுவதையும் எக்வா நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முயற்சி நிறுவனங்களுக்கு எக்வா நிறுவனத்தால் முதலீடுகள் வழங்கப்பட்டு நிதி திரட்டுவது எப்படி என்பது தொடர்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
Ek’celerator என்று தனித்துவமாக அழைக்கப்படும் EKVA Accelerator முன்முயற்சி 2022 இல் நம்பிக்கை அளிக்கும் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து வலுவூட்டும் பொருட்டு நிறுவப்பட்டது.
யோசனையை மட்டும் கொண்டுள்ள தொழில் முயற்சிகள், அந்த யோசனையை வைத்துச் செய்யப்பட்ட மாதிரிக் கருத்திட்டத்தின் ஆதாரத்தை (PoC) கொண்டுள்ள தொழில் முயற்சிகள் அல்லது பருமட்டான முதற்கட்ட உற்பத்திகளை (MVP) கொண்டுள்ள தொழில் முயற்சிகள் தொடக்கம் வியாபாரத்தில் காலூன்றவும் ஆரம்ப வருமானத்திற்காகவும் போட்டியிடும் நிலை வரை வளர்ந்துள்ள தொழில் முயற்சிகள் வரை எந்த நிலையிலும் உள்ள கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத தொழில் முயற்சி நிறுவனங்களின் விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என எக்வா எல்எல்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சம்பிக்க முனசிங்க தெரிவித்தார்.
Ek’celerator One Cohort இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 -100 தொழில் முயற்சிகளை ஆதரிக்க தேவையான 50% நிதியை நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள தொழில் முயற்சி அமைப்பில் கணிசமான பங்கை வகிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தொழில் முயற்சிகளுக்கான கவுன்சில் (CFS) எக்வாவுடன் கூட்டு சேர்ந்துள்ளதுடன் அதன் நோக்கங்களை அடைவதை உறுதிசெய்யும் வகையில் அதன் ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளது.
“CFS ஆனது எக்வா அறிமுகப்படுத்தும் இம்முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் உறுப்பினர்களையும் சிலோன் சேம்பர்ஸ் உறுப்பினர்களையும் Ekva Accelerator நிதியில் முதலீடு செய்வதன் மூலம் இத்திட்டத்தில் பங்குபெற ஊக்குவிக்கும் எனவும் எக்வா எல்.எல்.சி இலங்கையிலுள்ள பெரு நிறுவனங்களை எமது முதலீட்டுடன் இணைந்துகொள்ள அழைக்கும்” எனவும் முனசிங்க மேலும் தெரிவித்தார்.
Ek’celerator One Fund ஆனதுஎக்வா எல்எல்சியின் துணை நிறுவனமாக செயற்படும் என்பதோடு அதன் உள்நாட்டு முகாமைத்துவக் குழுவால் நிர்வகிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முயற்சிகளுக்கு அத்தியாவசிய கருவிகளை வழங்க, AWS, Google, Azure, Salesforce, Hubspot போன்ற கூட்டாளர்களிடமிருந்து எக்வா சிறப்பு ஆதரவைப் பெறும். “இலங்கையர்கள் தலைமைப் பீடங்களில் இருப்பதால், இந்நாட்டு மக்களின் தேவைகள், அவற்றின் வகைகள் சிந்திக்கும் விதம் என்பன பற்றிய புரிதல் எங்களுக்கு உண்டு.
இந்நாட்டில் பிரகாசமான தொழில் முயற்சிகளைக் கண்டறிவதற்கு சர்வதேச நிபுணத்துவத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் முன்னணி நிறுவனங்களான JP Morgan, Deutsche Bank, AT&T, Cirque Du Soleil, MGM Hospitality, Akon Legacy Ventures, Rabo Bank, Finish Line போன்றவற்றில் உயர் நிர்வாக பதவிகளில் பணியாற்றிய சர்வதேச நிபுணர்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம்” என பொடேஜு கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முயற்சிகளுக்கு மனித வள முகாமைத்துவம், சட்டம், சந்தைப்படுத்தல், கணக்கீடு மற்றும் இணக்கம் ஆகியவற்றை ஒரே கூரையின்கீழ் பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்க நிறுவனம் விரும்புவதாகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை Unicorn Club இல் அதிலும் குறிப்பாக தமது நிறுவனங்களுடன் இணைவதே தமது நீண்ட கால நோக்கம் எனவும் Ekva இன் CFO பிராட்லி சீலிக் தெரிவித்தார்.
Ekva / එක්ව / ஒன்றாக/ Together என்பது மொழி, நிறம், பாலின அடையாளம் அல்லது தங்கள் கருத்தியல்களில் வேரூன்றிய மாற்றுத்திறனாளிகள் என எதனையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.