அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளிள் உள்ள ஆசியிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் வளச்சியடையலாம் என அனுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விஷேட வைத்திய ஆர்.எம்.எஸ்.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் நகர சபை, கலென்பிதுனுவெவ, பதவிய, தலாவ மற்றும் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹொரவ்பத்தான, பதவிய மற்றும் தலாவ பகுதியிகளில் உள்ள ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.