அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் பாடசாலைப் பேருந்து மீது உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும் 56 வயதுடைய விலங்கு அபிவிருத்தி ஆலோசகர் சம்பத் வடுகே என்பவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது