அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தில் 2500 இற்கும் அதிகமான கொள்கலன்கள் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றை விடுவிப்பதற்குத் தேவையான டொலர்கள் வழங்கப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கலன்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அரிசி, சீனி, கடலை, பருப்பு, செத்தல் மிளகாய், கருவாடு, கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.