சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதோடு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி ஒன்றின் விலைகள் 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவை தவிர , காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச குறிப்பிட்டுள்ளது.