நாட்டிலுள்ள சகல அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் எந்த ஒரு கல்வி வலயத்திலும் இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்துகை கிடைக்கப்பெறாது ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இருப்பின், அதனை அவர்கள் பணிபுரியும் பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதனைத் தெரியப்படுத்தி, தடுப்பூசியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.