அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன இராணுவ தளபாடங்களை இந்தியா – சீனா இடையேயான எல்லையில் இந்திய இராணுவம் குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள், அதிநவீன எடை குறைந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா குவித்திருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவின் தாக்குதல் திறன் சீனாவுக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சீனா கடந்த வாரம் உயர்ரக ஆயுதங்களை எல்லையில் குவித்த நிலையில் அதற்கு ஒரு படி மேலாக இந்தியா இப்போது அமெரிக்க தயாரிப்பு அதிநவீன போர்க்கருவிகளை எல்லையில் இறக்கியிருக்கிறது.
சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தவறான யூகங்களை கொண்டிருப்பதாக இந்தியா தொடர்பில் சீனா விமர்சித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.