திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ்சொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்சொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

