கடந்த இரண்டு வாரங்களில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் (CAA) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்த 105 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவ்வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மேலும் வலியுறுத்தியது.
CAA இன் படி, ஒரு தனி உரிமையாளர் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், உரிமையாளருக்கு ரூ. 100,000 முதல் ரூ. 500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது ஐந்து மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
CAA சட்டத்தின் கீழ், ஒரு தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததாகக் கண்டறியப்பட்டால், நீதிமன்றம் ரூ. 500,000 முதல் ரூ. 5 மில்லியன் வரை அபராதம் விதிக்கலாம் என்று அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை அரிசி தொடர்பான 3,000க்கும் மேற்பட்ட சோதனைகளை CAA நடத்தியுள்ளது.
இவற்றில், 1,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அண்மைய ஊடக சந்திப்பில் விவரங்களை வெளியிட்ட CAA தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.