நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மத்திய மலைநாட்டில் உள்ள நீர் வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.
அதிக மழை காரணமாக லக்ஸபான, எபடீன், மரே, காட்மோர், மோஹினி எல்ல, டெவோன், சென் கிளையார் உள்ளிட்ட பிரதான நீர் வீழ்ச்சிகள் பொதுப்பொழிவு பெற்றுள்ளன.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற பெரிய சிறிய சகல நீர் வீழ்ச்சிகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
ஆகவே இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதனை தவிர்க்குமாறும் பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.