கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் பகுதியில் இன்று (06) அதிகாலை வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகளும் மற்றும் 49,500 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
அத்துடன் பெறுமதிமிக்க இரண்டு தொலைபேசிகள் மற்றும் உரிமையாளரின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டு உரிமையாளருக்கோ வீட்டுத் தளபாடங்களுகோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிமையாளர் அதிகாலை எழுந்து பார்த்த போது வீட்டில் திருடு போன விடயம் தெரிய வந்துள்ளது.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் மற்றும் தருமபுர பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.