கலவானை நகரில் உள்ள தனியார் கார் பழுதுபார்க்கும் நிறுவனத்திற்கு அருகில் இன்று (02) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கலவான, கோனகலகந்த பகுதியைச் சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜித ஜயசூரிய (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கலவானை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.