தாய்லாந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு நன்கொடையளிக்கப்பட்ட முத்துராஜா யானையை ஏற்றிச் செல்வதற்காக சிறப்பு விமானம் நட்டுக்கு வரவுள்ளது.
இதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
6 மணிநேர விமானப் பயணத்தின் மூலம் முத்துராஜா யானை மீண்டும் தாய்லாந்து செல்லவுள்ளது.
அதேவேளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த முத்துராஜாவுக்கு சிகிச்சையளிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் யானை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.