நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்காக பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் (Paris Club of Nations) மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவற்றின் அதிகாரபூர்வ கடன் குழுவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் குழுவின் மதிப்பாய்வுக்கு முன்னர் இந்த உடன்பாடு கைச்சாத்திட்ப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்பதில் அரசாங்கம் மிகவும் சாதகமான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கான மதிப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும் நாட்டிற்கு 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தனியார் பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் வணிகக் கடன்கள் சம்பந்தப்பட்ட கடன்கள் எப்போது முடிவடையும் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது.