இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் லலித் டி சில்வா இலங்கைப் போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான சுமார்1, 400 பேருந்துகள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாக கூறியுள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளானப் பேருந்துகளை புனரமைத்து மீள போக்குவரத்தில் செயற்படுத்துவதற்கு வருடமொன்றுக்கு 46.5 கோடி ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்துகளை மீள போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படும் காலப்பகுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபா வருமானம் இழக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்துகளை மீள புனரமைத்து போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் காலப்பகுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபா வருமானம் இழக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேருந்து சாரதிகளை பயிற்றுக்குவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடம் 600 சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் மேல்மாகாண சாரதிகளுக்கு பயிற்சியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளின் தவறுகளை ஆவணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சாரதிகளுக்கு தகுதி விதிக் கோவைகள் அடங்கிய புத்தகமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விசேட பயிற்சி அளிக்கப்பட வேண்டிய சாரதிகள் அடையாளங்காணப்படவுள்ளனர். அனைத்து டிப்போக்களிலும் விபத்து விசாரணை அதிகாரிகள் நேற்று முதல் தகுதி பரிசோதனை புத்தகத்தை பேணவேண்டியவை தொடர்பிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் லலித் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.