ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இவ் வெற்றியின் மூலம் தசுன் ஷனகா அதிக எண்ணிக்கையிலான T20I வெற்றிகளைப் பெற்ற இலங்கை கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தசுன் ஷனக 31 முறை டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கைக்கு கேப்டனாக இருந்தது மட்டும் அன்றி அதில் 14 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
மேலும் இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனா 65% வெற்றி சதவீதத்துடன் இலங்கையின் T20I கேப்டனாக மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்ததை தொடர்ந்து குமார் சங்கக்கார 59.09% வெற்றி சதவீதத்துடன் உடன் இருக்கிறார்.