இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் (02-05-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
நாட்டில் சமீபத்தில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 2 இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன்படி, இன்று 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.