அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதற்காக அதிக அரசாங்க பணம் தேவை என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதய சேவைகள் கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, முக்கிய இதய பராமரிப்புக்கான காத்திருப்பு பட்டியல்கள் மிக நீளமாக இருந்தன என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் கூறியது.
காத்திருப்பு பட்டியலைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு 1 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த இலையுதிர்காலத்தில் இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை காத்திருப்பு பட்டியலில், கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் இருக்கக்கூடும் என்று புதிய பகுப்பாய்வு