ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், கண்டி நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.