ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (2023.11.12) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மது அருந்திய நிலையில் ஹட்டனுக்கு பஸ்ஸில் சென்றுள்ளார் எனவும், பஸ்ஸில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே இவ்வாறு ஆற்றில் விழுந்து காணமற்போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.