மறுசீரமைப்பு திட்டத்துக்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ ஏலம் விடுவதற்கான மனுக் கோரும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.