குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் தம்புள்ளை பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (11) அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.