மாத்தறை, கம்புருபிட்டிய, ரஞ்சகொடவில் இடம்பெற்ற இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மாத்தறையில் ஏற்பட்ட மோசமான காலநிலையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் இறுதிக் கிரியை நிகழ்வை நடத்த முடியாது அங்குள்ள மக்கள் திண்டாடியுள்ளனர்.
இதனையடுத்து, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இறுதிக் கிரியைகளுக்காக சடலத்தை எடுத்துச் செல்ல படகுகள் பயன்படுத்தப்பட்டன.
சடலத்தை எடுத்துச் செல்ல பேரிடர் மேலாண்மை பிரிவும் ஆதரவு அளித்ததாக கூறப்படுகின்றது.