வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (2023.12.06) காலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீ பரவலில் உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரம் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.