இந்த ஆண்டு பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.
எனினும் கேளிக்கை வெடி பொருட்களின் உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் இன்மையால் உற்பத்தி நடவடிக்கைகள் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முறை சித்திரைப் புத்தாண்டை இலக்காக கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கேளிக்கை வெடிப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் தற்போது கேளிக்கை வெடி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.