வெங்காயத்தை மையப்படுத்தியே உணவு பொருள் தயாரிக்கப்படுகிறது.மசாலாப் பொருட்களில் சிறந்து விளங்கும் வெங்காயம் உணவுக்கு சுவையை கொடுக்கிறது.
வெங்காயத்தில் அதிகளவு நீர் நிரம்பியுள்ளது அத்தோடு குறைந்த அளவே இதில் கொழுப்பு உள்ளது.
வெங்காயத்தை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம் இதனை எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு பலன் கிடைக்கிறது.
சிறுநீரக பிரச்சனை
பொதுவாக வெங்காயம் உடல் எடையை குறைப்பது உடலுக்கு குளிர்ச்சி தருவது சிறுநீரக பிரச்சனையை சரிசெய்வது போன்ற பல பிரச்சனைகளை சரி செய்கிறது.
வெங்காயத்தில் இன்சுலின் உற்பத்தியை துரிதப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள் உள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு
இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது இதனால் வெங்காயம் நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது.
வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது ரத்தம் உறைதல் பிரச்சனைகளை சரிசெய்து ரத்த ஓட்டத்தை சீராக்க வழிவகுக்கிறது.
இதுதவிர வெங்காயம் இன்னும் சில நன்மைகளை கொண்டிருக்கிறது.
சளி பிரச்சனை
வெங்காயம் சாப்பிடுவதால் சளி பிரச்சனை மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமடையும். உணவின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் இந்த எளிய வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை செய்கிறது.
வெங்காயத்தில் என்னதான் உடலுக்கு நன்மைபயக்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தாலும் பச்சையாக வெங்காயம் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்.