ராகம பிரதேசத்தில் வீதியில் விழுந்து உயிரிழந்த ஒருவரின் கையில் கொவிட் சோதனை அறிக்கை இருந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபர் 62 வயது மதிக்கத்தக்க சுபசிங்க மாவத்த, பட்டுவத்த, ராகம எனும் இடத்தை வதிவிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகின்றது.
குறித்த நபர் இருமல் மற்றும் மார்பு வலி காரணமாக ராகமவிலுள்ள தனியார் மருத்துவமனையில் துரித அண்டிஜென் பரிசோதனை செய்துள்ளார்.
இதனையடுத்து கையில் சோதனை அறிக்கையுடன் வைத்தியசாலை யிலிருந்து 20 மீற்றர் தொலைவில் குறித்த நபர் வீழ்ந்து இறந்துள்ளதாக பொலிஸார் கூறினா். உயிரிழந்தவர் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் டோஸைப் பெறவிருந்தார்.
இந்நிலையில் சடலம் ராகம போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததாக ராகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.