இரத்தினபுரியில் பொத்துப்பிட்டிய ரம்புக்க பகுதியில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ரம்புக்க பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அயல் வீட்டில் வசிக்கும் நபர் மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பில் 28 முதல் 35 வயதுக்குட்பட்ட அயல் வீட்டில் வசிக்கும் நபர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.