பலரும் விரும்பி சாப்பிடும் முட்டை மற்றும் அப்பங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
புறநகர் பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை அப்பம் தற்போது சாதாரண உணவகங்களில் 120 முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
முட்டை அப்பங்களின் விலை உயர்வு தொடர்பாக உணவக உரிமையாளர்கள் கூறுகையில், முட்டை விலை 60 முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மேலும் கேஸ் விலை உயர்ந்துள்ளதாலும், முட்டை அப்பம் விலையை உயர்ந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.