கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவகம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு ஊடக அமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
காணி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கொழும்பு நகரில் வேறு இடத்தில் லேக்ஹவுஸ் நிறுவகத்தை ஆரம்பிக்க அல்லது நிறுவனங்களை கலைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹொட்டல் தொகுதிக்காக இந்த காணிகளை வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லேக்ஹவுஸ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கடனை வழங்குவதில் உள்ள பிரச்சினையையும் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது