விமானம் மூலம் இலங்கைக்கு குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வீட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இது தற்போது அதிகம் பேசப்படும் மாடல் அழகி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 கோடி கொடுத்து வாங்கியதாகவும், மீதித் தொகையை தருவதாகவும் அவர் கூறியதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறினார்.

