கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயிற்சி நடவடிக்கையின் போது நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய வெடி பொருளே வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.