பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள் தங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் எவருக்கும் இடையூறு, தொந்தரவு செய்யாமல் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஒரு காதல் ஜோடியின் செயல் அமைந்துள்ளது.
ஒரு ஜோடி விமான இருக்கையில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பயனர், “விமானத்தில் என் பார்வையை நம்ப முடியவில்லை 4 மணித்தியால விமானம் முழுவதும் இப்படித்தான் இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவரது பதிவு 21 மில்லியன் பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், ”விமானப் பணிப்பெண் எப்படி எதுவும் சொல்லவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.