தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக முகநூலில் இலங்கை கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து கைத்தொழில் அமைச்சில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமைச்சின் வழக்கமான செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.