5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தச் செய்தி வெளியானதையடுத்து, குறித்த முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார்.