நேபாளம் – காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பல உயிர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் நேபாளத்தில் நடந்த மக்கள் புரட்சி போராட்டங்களின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதோடு மேலும் பலரையும் காப்பாற்றியுள்ளார்.
செந்தில் தொண்டமான் தொழிற்சங்க மகாநாட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் செந்தில் தொண்டமான் ஈடுபட்டுள்ளார்.
அவரின் செயற்பாடு காரணமாக பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
செந்தில் தொண்டமானின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் இடம்பெற்ற இடரின் போது மனிதாபிமான மீட்பு பணியினை ஆற்றிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும்இ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மானிடம் மிக்க மகத்தான பணியினை இடர்காலத்தில் ஆற்றியுள்ளீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, செந்தில் தொண்டமான் நரகத்தில் சிக்கிய பல குடும்பங்களைக் காப்பாற்ற அவர் விரைவாகத் தலையிட்டு, உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார் என பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமலை கூறியுள்ளார்.