யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நேற்றையதினம் (26-11-2023) கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வே.பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியுள்ளனர்.
பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.