விஜய் ஒதுக்கியதால் சீரியலில் நடிக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய், தந்தையை பார்த்து யாரோ மாதிரி சென்ற விஜய்
சமீபத்தில் நடைபெற்ற ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் வருகை தந்தார். அப்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் நடிகர் விஜய்க்கு கை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
அந்த நேரத்தில் தாய் ஷோபனாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்யை பார்த்ததும் எழுந்து நின்றனர். அப்போது, விஜய் மற்றவர்களுக்கு கை கொடுத்து வந்தபோது, தாய்க்கும், தந்தைக்கும் கை கொடுத்துவிட்டு யாரோ மாதிரி செல்ல, தாய் ஷோபானா விஜய்யை ஏக்கத்தோடு பார்க்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. விஜய்யின் இந்த செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து கமெண்ட் செய்தனர்.
சீரியலில் நடிக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எஸ்ஏ சந்திரசேகர் விரும்பினார். ஆனால், அது விஜய்க்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விஜய் தந்தையை ஒதுக்கி வைத்திருக்கிறார். ஆனால், எஸ்ஏசி இந்த வயதில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.
‘கிழக்கு வாசல்’ என்ற சீரியலில் எஸ்.ஏ.சி. நடித்துள்ளார். இந்த சீரியலை விஜய் டிவியில் ஒளிபரப்ப உள்ளது. இத்தொடரில், நடிகை ராதிகா, விஜய்யின் நண்பர் சஞ்சீவ், நாகேஷின் மகன் ஆனந்த் பாபு, ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த சீரியலை ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரடான் மீடியா தயாரிக்கிறது.
தற்போது, இந்த சீரியலின் முதல் நாள் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது. கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்களின் குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இதன் ப்ரோமோவும் விஜய் டிவியில் வெளியாக இருக்கிறது.