வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள `கோட்’ (Greatest of all time) திரைப்படம் இரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Goat திரைப்படம் மங்காத்தாவை விஞ்சும் அளவுக்கு இருக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இது என்ன கதைக்களம் என்பதை முன்னோட்டத்தில் கூறிவிட்டேன். ஆனால் அதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும், புரியும் வகையிலும் இந்தத் திரைப்படம் இருக்கும். யாரையும் குழப்பும் அளவுக்கு இந்தத் திரைப்படம் எடுக்கப்படவில்லை.
இந்தப் படம் மங்காத்தாவை விஞ்சும் அளவுக்கு நிச்சயம் இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூர்வமான படமாக இல்லாமல், முழுவதும் ஆண்கள் சம்பந்தப்பட்ட படமாகவும் துரோகத்தைக் காட்டும் படமாகவும் இருக்கும்.
ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் முழுவதும் குடும்பப் படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனிநபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதைதான் இது என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.