இலங்கை சந்தையில் தற்போது காய்கறி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மரக்கறிகள் தவிர, ஆண்டில் அதிகம் நுகரப்படும் வாழைப்பழங்களின் விலையும் இன்றைய தினம் (03-04-2023) குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோகிராம் சீனி வாழைப்பழம் மற்றும் புளிப்பு வாழைப்பழம் 150 ரூபாவாக குறைந்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 120 ரூபாவாக அதிகரித்த தேங்காய் ஒன்றின் விலையும் 90 ரூபாவாக குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன.