கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும்.
2015 இல் – 652,446 வாகனங்கள்
2016 இல் 466,986 வாகனங்கள்
2017 இல் 448,320 வாகனங்கள்
2018 இல் 496,282 வாகனங்கள்
2019 இல் 332,452 வாகனங்கள்
2020 இல் 102,228 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.