கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அத்தோடு சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டமையுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.