வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் பத்மநாதன் டயான் என்ற 21 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இளைஞர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையால் அவரது தந்தை தேடியுள்ளார்.
இதன்போது காணியின் பின்புறத்தில் மேற்படி இளைஞர் சடலமாக கிடந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தைப் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.