வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மதுபோதையில் வந்த ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மூவர் தலைமறைவாகி விட்டனர்.
மது மற்றும் போதைக்கு அடிமையான இந்த இளைஞர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.